Saturday, December 26, 2009
கீசு-7
கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேயப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!
- ஆண்டாள்
பேய்பெண் - அறிவில்லாத பெண்.
பிறப்பு- ஆமைத்தாலி.
பேர்த்து- அசைத்து.
இத்திருப்பாவையின் உரை!
ஏ மதிகெட்ட பெண்ணே! எல்லாவிடத்திலும் பாரத்வாஜ பக்ஷிகளானவை ஒன்றோடொன்று ஸம்ச்லேக்ஷித்து கீச்சுகீசென்று பேசிய பேச்சினுடைய ஆரவாரத்தை இன்னும் நீ கேட்க்கவில்லையோ? பரிமள வஸ்துக்களினால் மணம் கமழா நின்றுள்ள கூந்தலையுடைய இடைப்பெங்கள் கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் கலகலவென சப்திக்கும் படியாக கைகளை அசைத்து மத்தாலே ஒசைப்படுத்திய தயிரின் ஒலியையும் கேட்கவில்லையோ? பெண்களுக்கெல்லாம் தலைமையாய் இருப்பவளே ஸ்ரீ மந் நாராயணாவதாரமான கண்ணபிரானை நாங்கள் பாடா நிற்கச் செய்தும் நீ அப்பாட்டைக் கேட்டும் வைத்தும் இங்ஙகனே உறங்குவாயோ? மிக்க தேஜஸ்ஸையுடையவளே! நீயே எழுந்து வந்து கதவைத் திற.






0 comments:
Post a Comment